Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

Videocon’s வேணுகோபால் திவாலானவர் என அறிவிப்பு

Videocon’s வேணுகோபால் திவாலானவர் என அறிவிப்பு

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்த ரியல் எஸ்டேட் திட்டத்தின் மூலம் இந்தத் தொகையைத் திரட்ட அவர் திட்டமிட்டிருந்தார்.

பகிரவும் WhatsApp Facebook

எஸ்பிஐ வங்கிக்கு செலுத்த வேண்டிய ரூ.12,668 கோடி கடன் நிலுவை தொடர்பான வழக்கில், வீடியோகான் குழுமத்தின் முன்னாள் நிறுவனர் வேணுகோபால் நந்தலால் தூத்தை திவாலானவராக மும்பை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் வீடியோகான் டெலி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனங்கள் பெற்ற கடன்களுக்கு வேணுகோபால் தூத், தனிப்பட்ட உத்தரவாதம் அளித்திருந்தார். இந்த நிறுவனங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதைத் தொடர்ந்து, 2018-ம் ஆண்டு பிப்ரவரியில் அவரது தனிப்பட்ட உத்தரவாதத்தை வங்கிகள் பயன்படுத்தின.

இதையடுத்து, வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 2018 ஜுன் மாதம் திவால் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. பின்னர், வீடியோகான் குழுமத்தின் மேலும் 12 நிறுவனங்களின் திவால் நடவடிக்கைகளும் ஒன்றிணைக்கப்பட்டன.

இதற்கிடையே, தனிப்பட்ட உத்தரவாததாரர் என்ற அடிப்படையில் தூத்துக்கு எதிராக எஸ்பிஐ தனியாக நடவடிக்கை எடுத்தது. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஏப்ரல் 8-ம் தேதி அவருக்கு எதிரான தனிநபர் திவால் தீர்வு நடவடிக்கையை என்சிஎல்டி தொடங்கியது.இந்தச் சூழலில், கடன் வழங்கியவர்களுக்கு 36 மாதங்களில் ரூ.600 கோடி செலுத்துவதாக தூத் முன்மொழிந்தார்.

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்த ரியல் எஸ்டேட் திட்டத்தின் மூலம் இந்தத் தொகையைத் திரட்ட அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால், கட்டுமானப் பணிகள், அரசு அனுமதிகள் மற்றும் எதிர்கால வருவாய் ஆகியவற்றைச் சார்ந்திருந்த இந்தத் திட்டத்தில் உடனடியாகப் பணம் செலுத்துவதற்கான உத்தரவாதம் இல்லை எனக் கடன் வழங்கியவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. 

இதையடுத்து, கடந்த ஜூலை 17-ம் தேதி ரூ.600 கோடி கடன் திருப்பிச் செலுத்தும் திட்டத்தை என்சிஎல்டி நிராகரித்தது. தொடர்ந்து, திவால் நடவடிக்கையை மேற்கொள்ள எஸ்பிஐ அனுமதி கோரியது.

கடந்த செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி, வட்டி மற்றும் அபராதம் உள்ளிட்டவற்றுடன் சேர்த்து ரூ.12,668.06 கோடி நிலுவையில் இருப்பதாக எஸ்பிஐ தெரிவித்தது. 

இதனைப் பரிசீலித்த தீர்ப்பாயம், சட்ட விதிகளின்படி மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்து, தூத்தை திவாலானவராக அறிவித்துள்ளது. மேலும், தூத்தின் சொத்துகளை நிர்வகித்து, கடன் வழங்கியவர்களுக்கு உரிய தொகையைப் பகிர்ந்தளிக்கும் திவால் அறங்காவலராக ஆஷிஷ் நாராயணை நியமித்து உத்தரவிட்ட்டுள்ளது.

முந்தைய செய்தி
லாஸ் ஏஞ்சல்ஸின் புதிய மேயரானார் தமிழ் பூர்வக்குடியான நித்யா ராமன்
அடுத்த செய்தி
AI wellness use surges, but accuracy concerns remain: McKinsey

தொடர்புடைய செய்திகள்